பதிவு செய்த நாள்
09
ஜூன்
2018
12:06
கரூர்: கரூர் நகர காவல் துறை மற்றும் திருக்குறள் பேரவை சார்பில், சிறந்த பூச்சொரிதல் குழுவுக்கு பரிசு வழங்கும் விழா, நகரத்தார் சங்க கட்டடத்தில் நேற்று நடந்தது. கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி, கடந்த மே, 18ல், பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. அதில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 46 குழுக்களின் அலங்கார வாகனங்கள் பங்கேற்றன. அதில், டி.சி., நற்பணி மன்றத்தின் வாகனம் முதல் பரிசு பெற்றது. இரண்டாம் பரிசுக்கு பைந்தமிழ் நற்பணி மன்றம், மூன்றாவது பரிசுக்கு மாரி நற்பணி மன்ற அலங்கார வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டன. பரிசு பெற்ற குழுக்களுக்கு, கரூர் டவுன் டி.எஸ்.பி., கும்மராஜா கோப்பை வழங்கினார். திருக்குறள் பேரவை தலைவர் மேலை பழனியப்பன், இன்ஸ்பெக்டர்கள் பிரித்திவிராஜ், சந்திரசேகரன், செந்தில்குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.