ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பங்கேற்பு
பதிவு செய்த நாள்
11
ஜூன் 2018 11:06
திருப்பூர்: திருப்பூரின் பல இடங்களில், ஷீரடி சாய்பாபாவுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் காங்கயம் ரோடு, ஆர்.வி.இ., நகர் முதல் வீதி, ஸ்ரீசாயி லட்சுமி ஆன்மிக நலமையத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 9:30 மணிக்கு, மங்கள இசையுடன் விழா துவங்கியது.
108 சாயி காயத்திரி மந்திரங்கள் முழங்க, ஷீரடி சாய்பாபாவுக்கு அபிேஷம் ஆராதனைகள் நடந்தன. பாபாவுக்கு, பீடம், திருவாச்சி, கிரீடம் அணிவிக்கப்பட்டது. சாயி பஜனையும், பின், மங்கள தீப ஆராதனை வழிபாடும் நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பூர் பொல்லிக்காளிபாளையம் சரவணா கார்டனில், ஸ்ரீ ஷீரடி ஆனந்த சாய்பாபா அருள்பீடம் சேவா அறக்கட்டளை செயல்படுகிறது. இதன் நான்காம் ஆண்டு விழா மற்றும் சிம்மாசனம் சாற்றுதல் விழா நடந்தது. இரு நாள் நடந்த நிகழ்ச்சியில், முதல் நாள், முளைப்பாலிகை, பல்லக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், 108 சங்காபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பிரபாவளி குடையுடன் கூடிய சிம்மாசனம் சாற்றுதல், சிறப்பு ஆரத்தி நடந்தது. ஆனந்தசாயி பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. மாலை, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
|