பதிவு செய்த நாள்
12
ஜூன்
2018
12:06
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், திருவாசகம் முற்றோதல் நடந்தது. இக்கோவிலில், மாணிக்க வாசகர்
பன்னிருந்திருமுறை மன்றம் சார்பில், 367வது முறையாக, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோலாட்ட மிட்டும், திருவாசகம் பாடியும், நடராஜரை வணங்கினர்.
காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், நடராஜர் உற்சவ சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.