குமாரபாளையம்: ஆனி முதல் ஞாயிறை முன்னிட்டு, குமாரபாளையம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையம் அக்ரஹாரம், லட்சுமிநாராயண சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத முதல் ஞாயிறை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று பக்திப் பாடல்கள் பாடி சுவாமியை வணங்கினர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.