சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஜூன் 15 முதல்கால யாகசாலையுடன் பூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் விசஷே சாந்தி, வேதிகை யாக பூஜை,பூர்ணாகுதி, திரவிய சமர்ப்பணம் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை, கோபூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம் செய்யப்பட்டு,கடம் புறப்பாடு நடந்தது.ராஜகோபுரம்,மூலவர் விமானக்கலசங்களில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். ராமநாதபுரம் என்.குமரன் சேதுபதி தலைமை வகித்தார்.சாயல்குடி சிவஞான பாண்டியன், தாசில்தார் முத்துலட்சுமி, கே.பிச்சைக்குருக்கள் முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் நிர்வாக குழு, கும்பாபிஷேக கமிட்டி செய்திருந்தனர்.