வேலூர்: வேலூர், சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரி பீடத்தில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நேற்று இரவு, 7:00 மணிக்கு மஹாவாராஹி யாகம் நடந்தது. ரங்கநாத சர்மா தலைமை வகித்தார். சந்தான ஈஸ்வரி சக்ர பீடம் நிர்வாகி புரு?ஷாத்துமன், அருணாசல சிவாச்சாரியார், பாலாஜி சிவம் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.