பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
01:06
வீரபாண்டி: வீரபக்த ஆஞ்சநேயர், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். சேலம் அருகே, காளிப்பட்டி, சென்றாய பெருமாள் கோவிலிலுள்ள, வீரபக்த ஆஞ்சநேயருக்கு, தமிழ் மாத முதல் ஞாயிறில், சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அதன்படி, ஆனி முதல் ஞாயிறை முன்னிட்டு, நேற்று காலை, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயபெருமாள், வீரபக்த ஆஞ்சநேயருக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம், வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். ஏற்பாடுகளை, வீரபக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.