பாளை., ஆயிரத்தம்பாள் கோயிலில் வரும் 24ல் கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2012 11:01
திருநெல்வேலி : பாளை., ஆயிரத்தம்பாள் கொடை விழா வரும் 24ம்தேதி நடக்கிறது. கள்ளர்குல தொண்டைமான் சமூகத்தினரின் சார்பில் பாளை., தெற்கு பஜாரில் உள்ள ஆயிரத்தம்பாள் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆயிரத்தம்பாள் கோயில் கொடை விழாவிற்காக கடந்த 17ம்தேதி கால்நாட்டுடன் விழா துவங்கியது. வரும்23ம்தேதி இரவு 8 மணிக்கு குடி அழைப்பும், சிவா குழுவினரின் நையாண்டி மேளமும், திருவனந்தபுரம் மாயா செண்டை மேளம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு திருக்குறுங்குடி ஐயப்பன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 24ம்தேதி காலை 6 மணிக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நையாண்டி மேளம் மற்றும் செண்டை மேளம் முழங்க சுந்தரவிநாயகர் கோயிலில் புறப்பட்டு 8ரதவீதிகள் வழியாக கோயிலை வந்தடைகிறது. 8 மணிக்கு தங்கராஜ், தங்கம் குழுவினரின் மகுடம் கனியாண் கூத்தும், மதியம் 12 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஆற்றுக்கு கரகம் புறப்பாடும், இரவு 8 மணிக்கு அம்பாள் சிங்க வாகனத்தில் 8 ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு இரவு படப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதில் பாளை.,கள்ளர் குல தொண்டைமான் சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர். ஏற்பாடுகளை பாளை., ஆயிரத்தம்பாள் கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.