பதிவு செய்த நாள்
20
ஜன
2012
11:01
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை ஸ்ரீகாட்டாறு யோகீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. கபிலர்மலை, கபிலர் ஆஸ்ரமம் ஸ்ரீ காட்டாறு யோகீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலை விநாயகர் வழிபாடு, புண்யாகம், மங்கள கணபதி யாகம் ஆகியவையும், மாலையில் வாஸ்து பூஜை, பூமி பூஜை, யாக பூஜை, ஹோமம், பூர்ணாகுதி நடக்கிறது. நாளை காலை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், ஹோமம், பூர்ணாகுதி, தீபாரதனையும், விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, மூலமுர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. உடன் மகாபிஷேகம், தசதரிசனம், தசதானம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவுக்கு, காஞ்சிபுரம் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் பேராசிரியர் பொன்னவைக்கோ தலைமை வகிக்கிறார். மாலையில், யோகீஸ்வரர் லட்சதீப நல் விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு, சேலம் மாவட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின் இயக்குனர் தங்கவேலு தலைமை வகிக்கிறார். மனவளக்கலை மன்றத்தின் துணை பேராசிரியர் குமரவேல், "சித்தர்கள் நெறி என்னும் தலைப்பில் பேசுகிறார். இந்த கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், உலக சமுதாய ஞான சபை, கபிலர் ஆஸ்ரம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.