உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் கிராமத்தில் பெரியாயி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 18ம் தேதி மாலை 7 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், அங்குராரர்பணம், ரக்ஷா பந்தனம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோ மாதா பூஜை, நாடி சந்தானமும் காலை 8 மணிக்கு யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 8.50 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு தீபாராதனைகள் நடந்தன.