பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
கூவம்: திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த விழா மற்றும் பிரம்மோற்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.கடம்பத்துார் ஒன்றியம், கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில். இங்கு, ஆண்டுதோறும் நடக்கும், அக்னி வசந்த விழா மற்றும் பிரம்மோற்சவம், நேற்று காலை, 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக, 13ம் தேதி, வியாசர் கொடியேற்ற விழாவும், நேற்று முன்தினம் மாலை, கணபதி பூஜையும் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், காலை மற்றும் மாலை வேளைகளில், அம்மன் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பக்காசூரன் மாடவீதி சுற்றி வரும் விழா, 30ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடைபெறும். ஜூலை, 1ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, துரியோதனன் படுகளமும், காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெறஉள்ளது. ஜூலை, 2ல், விடையாற்றி அபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறும்.