பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
எலச்சிபாளையம்: பெரியமணலி கரியகாளியம்மன் கோவிலில் நேற்று, திருமணமான ஆண், பெண்களுக்கு எழுதிங்கள் நிகழ்ச்சி நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், கோட்டபாளையத்தில், வரும், 25ல் நடக்கவுள்ள சுயம்பு அரசு, வேம்பு திருமண விழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, பெரியமணலி கரிய காளியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் நடந்த எழுதிங்கள் நிகழ்ச்சியில், 113 தம்பதியினருக்கு சீர்வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 2,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.