மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2018 12:06
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பிச்சம்பட்டியில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில், கரூர் - திருச்சி சாலையில் உள்ளது. இக்கோவில் திருவிழா இன்று துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, பிச்சம்பட்டியிலிருந்து, கிருஷ்ணராயபுரம் குருநாதன் கோவில் வழியாக, மாரியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.