பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், காவேரி ரோட்டில் உள்ள, ஐயப்பன் கோவில் முன்புறம், புதிதாக கட்டப்பட்டுள்ள விஸ்வரூப சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம், ஜூலை, 1ல் நடக்கவுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாக தலைவர் என்.சிவநேசன் கூறியதாவது: கோவிலின் உட்புறம், பஞ்சமுக விநாயகர், பாணலிங்கேஸ்வரர், ஸ்ரீதத்தாத்ரேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுற்று பிரகாரத்தில் பக்த ஆஞ்சநேயர், நுழைவு வாயிலில், பாவங்களை எரிக்கும், துனி சிலை அமைந்துள்ளது. கும்பாபி?ஷக விழா, வரும், 28ல் துவங்குகிறது. ஜூலை, 1ல் காலை, 6:00 மணிக்கு யாக பூஜை, 9:00 மணிக்கு சீரடி சாய்பாபா மற்றும் அனைத்து சுவாமிகள், கும்பத்துக்கும் கும்பாபி?ஷகம் நடக்கிறது. தொடர்ந்து, மங்கள ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது. அதேநேரம், 28 முதல் தினமும் மாலை, 6:00 மணிக்கு, ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு கூறினார். அப்போது இயக்குனர் எஸ்.சாரதாம்பாள் உடனிருந்தார்.