பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
12:06
கோபி: சாரதா மாரியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை விழா துவங்கியது. கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை, 1,008 சங்காபி?ஷக விழா மற்றும் கும்பாபிஷேக ஆண்டுவிழா நேற்று துவங்கியது. கணபதி பூஜையை தொடர்ந்து, லட்சார்ச்சனை நடந்தது. மொத்தம், 15 அர்ச்சகர்கள், அம்மன் சன்னதி முன், ஆகமவிதிப்படி, லட்சார்ச்சனை செய்தனர். பின் மகாதீபாராதனை நடந்தது. இந்த விஷேச பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 1,008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடக்கிறது. பின், லட்சார்ச்சனை பூர்த்தி, மகா தீபாராதனை நடக்கிறது.