சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழிநாதர், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் ஆனி திருவிழா ஜூன் 17 ல் கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும் இரவு ரிஷபம், கிளி, அன்னம், வெள்ளிரிஷபம், அதிகார நந்திகேஸ்வரர் காமதேனு, குதிரை, பூத வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தன. ஜூன் 24ல் பூ பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (ஜூன் 26) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை உற்சவ சாந்தி நிறைவு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் கிராமமக்கள் செய்தனர்.