பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
10:06
பெரியகுளம், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கோலாகலமாக நடந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டு ஆசீர்வதித்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. 2013ல் திருப்பணி துவங்கியது. 72 அடி உயரத்துடன் ஐந்து நிலை புதிய ராஜகோபுரம், 200க்கும் மேற்பட்ட சுதைச்சிற்பங்களும், 9 கலசங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அறம்வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு புதிதாக மூன்று கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, செம்புக்கவசம் பொருத்தப்பட்டுள்ளது. 157 சுவாமி, அம்மன் சிலைகள், துாண்களும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஜூன் 22 ல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவங்கியது. மகாகணபதி ேஹாமம், தனபூஜை ஆகியவை நான்கு நாட்களில், நான்குகாலம் யாகபூஜை நடந்தது.
கும்பாபிஷேகம்: வேதபுரி ஆசிரமம் ஓம்காரநந்தர் சிவபுராணம் பாடினார். வேதம் மந்திரங்கள் ஒலிக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று காலை 9:05 மணியில் இருந்து 9:30 மணிக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் ராஜாபட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ராஜேந்திர சோழீஸ்வரர் சன்னதியின் கோபுரத்தில் பச்சைகொடி அசைத்ததும், ஒரே நேரத்தில் அறம்வளர்த்தநாயகி, ராஜேந்திரசோழீஸ்வரர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது வானத்தில் நான்கு கருடன்கள் பறந்து, ஆசீர்வதித்தது. பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
பங்கேற்றோர்: குரு தட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சி.சரவணன். பழனி ராஜகோபால், கே.எம்.சி., குரூப்ஸ் ஆப் கம்பெனிஸ் நிர்வாகிகள் முத்துகோவிந்தன், முரளிதரன், வர்த்தகபிரமுகர்கள் ஆர்.அழகர், ஸ்ரீதர், குமார், ஷியாம், ராஜா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் ராஜப்பா, அருண்பிரஷாத், ஓ.பாலமுருகன், ஓ. சண்முகசுந்தரம், டாக்டர் ஆர்.முத்துக்குகன், சுப்புராஜ், தேனி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.பி.எஸ்.முருகசேன், நிர்வாக குழு உறுப்பினர் பி.பி.கே.முருகவேல், காமதேனு முருகேசன், லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் லதா, செயலாளர் விஜயராணி, நிர்வாககுழு உறுப்பினர் முருகமலைசின்னச்சாமி, தாசில்தார் கிருஷ்ணக்குமார், பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், வழக்கறிஞர்கள் அம்பாசங்கர், வெள்ளைச்சாமி, ஜெயராமன், முன்னாள் தாசில்தார் பாலசுந்தரம், ஆறுமுகம், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முன்னாள் தலைவர் செல்லமுத்து, நகர செயலாளர் ராதா, ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் முருகானந்தம் முன்னாள் கவுன்சிலர்கள் பி.பி.எஸ்., பாலசுப்பிரமணியன், கிட்டு, ராஜகோபால், அன்பு, சந்தோஷம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயில் திருப்பணிகளை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், திருப்பணிக்குழு தலைவர் சசிதரன், திருப்பணிக்குழுவினர்கள்பி.சி.சிதம்பரசூரியவேலு, ஓ.ராஜா, நாகராஜன், பாண்டியராஜ், கே.ஏ.ஆர். குணசேகரன், வடுகபட்டி டாக்டர் சி.செல்வராஜ், எம்.ஏ.எம்.சந்திரசேகரன் மற்றும் தேனி மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், கைலாசநாதர் கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் ஆகியோர் செய்திருந்தனர்.