பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
12:06
உடுமலை: ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஜக்கம்பாளையம் கிராமத்தில் நடந்த, உச்சிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 23ம்தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சுதர்சன ஹோமம், தனபூஜை மற்றும் கோ பூஜைகளும் அன்று மாலை, 6:00 மணிக்கு, முதல் காலயாக பூஜை நடந்தது. இரண்டாம் கால யாகபூஜை, நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவில் நேற்று விக்னஷே்வரபூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஜெப ேஹாமம், காலை, 7:00 மணி முதல் 9:30 மணி வரை நடந்தன. காலை, 9:30 மணிக்கு, உச்சிகாளியம்மனுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்று, கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.