முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் செண்பூ கூத்த அய்யனார், ஸ்ரீ கருங்காளி அம்மன் கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. மேலக்கொடுமலுார் மங்கள முனீஸ்வர குருக்கள் நடத்தினார். பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.