திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த ஆற்காடு கிராமத்தில் உள்ள சாந்த காளியம்மன் கோவில் கும்பாபிஷக விழா நடந்தது. ஆற்காடு கிராமத்தில் உள்ள சாந்த காளியம்மன் கோவில் திருப்பணி நிறைவடைந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 7:00 மணிக்கு கோபூஜை‚ தம்பதி பூஜை‚ வேதகோஷம்‚ ருத்ரசமக நமக கோஷம்‚ யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்து, காலை 10:00 மணிக்கு மூல கலசம் மற்றும் மூல மூர்த்திக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.