பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
01:06
கன்னிவாடி, குட்டத்துப்பட்டியில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரட்டுப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னஷே்வர பூஜையுடன் துவங்கி, வாஸ்து சாந்தி, வேதிகா, சோமகும்ப பூஜை, விஸ்வக்சேனர், லட்சுமி, சுதர்சன ஹோமங்கள் நடந்தது. விசஷே பூஜைகளுக்குப்பின், கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பெருமாள், பரிவார நாகம்மன் மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.