திருநெல்வேலி: திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி வலம் வருதல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (27-ம் தேதி) காலை 9:30 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் தேரோட்டம் கோலாகமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.