சாயல்குடி: -சாயல்குடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக ஜூன் 19 அன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.விநாயகர், கருப்பண்ணசாமி, பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு யாகசாலை பூஜையும், அபிஷேக, ஆராதனையும்,செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நேற்று வருஷாபிேஷகம் நடந்தது. மாலையில் பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து பெண்கள் பூ தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பூஜைகளை சண்முக பட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை விஸ்வகர்மா உறவின்முறை விழாக்குழுவினர்செய்திருந்தனர்.