காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2018 11:06
காரைக்கால்: புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா கோலாகலமாக துவங்கியது. பிச்சாண்டவர் கோலத்தில் சிவபெருமான் வீதியுலா வந்தார். அப்போது பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசினர்.
சிவபெருமானால் அம்மையே அன்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார்.63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா 25ம்தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. விழாவில் இன்று நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொளிக்க மேள தாளம் முழுங்க காலை.6.30 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து பின் வீடுகளில் மாடிகளில் இருந்து பக்தர்கள் வேண்டுதலையொட்டி மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர்.