வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்வச விழாவில் இன்று தேர் திருவிழா நடக்கிறது. வில்லியனுார் பெருந்தேவித்தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் 14ம் ஆண்டு பிரம்மோற்வச விழா, கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெறும் விழாவில், காலையில் சிறப்பு திருமஞ்சனம், மாலையில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று 28ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் தேர் திருவிழா நடக்கிறது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில் திருக்கோவிலுர் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வடம் பிடித்து, துவக்கி வைக்கிறார்.