சென்னிமலை: சென்னிமலையில், அருணகிரிநாதர் குருபூஜை விழா நடந்தது. சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தின் சார்பாக, தினமும் காலை மற்றும் மாலையில் சென்னிமலை முருகனுக்கு பால், தயிர், மற்றும் அபி?ஷக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அருணகிரி நாதர் குருபூஜை விழா நடந்தது. அருணகிரிநாதர் சிலைக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, மடத்தில் குருந்து சுவாமி புறப்பாடு தொடங்கி, சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.