அரூர்: அரூர் மேட்டுப்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம், நேற்று நடந்தது. அரூர் மேட்டுப்பட்டி, நான்குரோட்டில் உள்ள சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா, கடந்த, 17ல், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம், மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, கும்பாபி?ஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.