பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
12:07
மோகனூர்: மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் புதுத்தெருவில், பாட்டப்பன், பாட்டி, பாலமுருகன், கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, முடிவடைந்தது. இதையடுத்து, நேற்று கோவில் கும்பாபி?ஷக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, சாமி வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு யாக பூஜை நடந்தது. காலை, 6:30 மணிக்கு, பாட்டப்பன், பாட்டி, பாலமுருகன், கருப்பண்ணசாமிக்கு கும்பாபி ?ஷகம், தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.