பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
புவனகிரி : "ராகவேந்திரர் சுவாமிகளின் அவதார தலமான புவனகிரியில், ராகவேந்திரா சுவாமிக்கு, ஒரே கல்லால் ஆன, 32 அடி உயர விஸ்வரூப சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என, ரிக் வேத பண்டிட் சீனுவாச ஆச்சார் தெரிவித்தார். இதுகுறித்து புவனகிரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், ராகவேந்திரா சுவாமிகளின் பட்டாபிஷேக விழா, வரும் பிப்ரவரி 22, 23, 24 ஆகிய தேதிகளில், மந்த்ராலயா தலைமை பீடாதிபதி ஸ்ஷ்மீந்திர தீர்த்த சாமிகள் தலைமையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, புவனகிரியிலுள்ள அனைத்து மண்டபங்களையும், கோவில் நிர்வாகம் புக்கிங் செய்துள்ளது. புவனகிரி ராகவேந்திரர் கோவில் அருகே, 32 அடியில் ஒரே கல்லில் ஆன, 32 அடியில் விஸ்வரூப சிலை அமைக்கவும், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டவும், கோவில் அறக்கட்டளை நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாறு சீனுவாச ஆச்சார் தெரிவித்தார்.