பதிவு செய்த நாள்
03
ஜூலை
2018
12:07
உடுமலை:திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, தர்ப்பண மண்டபம், தளம் என, 49 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத்துறை சார்பில், 49 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவில் வளாகம், அன்னதான மண்டபம் பகுதியில், மண் தரையாக இருந்த பகுதிகளில், 10 லட்சம் ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒன்பது லட்சம் ரூபாய் செலவில், சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகம் மின் விளக்குகளால் ஒளிரும் வகையில், 20 லட்சம் ரூபாய் செலவில், எல்.இ.டி.,மின் விளக்குகள் மற்றும் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் பக்தர்களுக்காக, தர்ப்பண மண்டபம், 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.மேலும், குடிநீர் வசதிக்காக, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட திட்ட மிடப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.