பதிவு செய்த நாள்
03
ஜூலை
2018
02:07
உன் உடலில் ஏற்பட்டுள்ள ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே! இறைவன் கருணைக்கடலில் நீ மூழ்கி எழுந்திரு. இதுபோன்ற ஆயிரம் துளிகள் இருந்தாலும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும். உங்களிடம் அன்பு இருந்தால் உங்களால் ஆகாதது ஒன்றும் இல்லை, நீங்கள் தன்னலத்தை துறந்தவர்களாக இருந்தால் உங்களை எதிர்க்கும் சக்தி ஒன்றும் இல்லை. தனி மனிதன் நிலை உயரப் பெற்றால் தேசமும் உயர்வடைந்தே தீரும் என்பது உலக நியதியாகும். கீழ்படிவதற்கு முதலில் கற்றுக்கொண்டால், கட்டளை இடும் பதவி தானாக உன்னை வந்தடையும். நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உள்ளவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாகிறாய். கவலைகளை நாளைக்கும் மன மகிழ்ச்சிகளை இன்றைக்கும் வைத்துக் கொள்வோம். ப்போதுதான் இந்த வாழ்க்கை சுமையாக இருக்காமல், சுவையாக இருக்கும். அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்கு தேவையில்லை, அன்பு தான் வாழ்க்கை.
பிறர்க்கு நன்மை செய்யும் இடம் நரகத்தில் இருக்கிறது என்றால், நீ அங்கேயே செல். ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிட்டுவிடாதீர்கள். மேலும் தோல்வி மனப்பான்மைக்கும் உள்ளத்திற்குள் நுழையவே இடம் தரக்கூடாது. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால், எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யக்கூடாது. மனித வடிவம் கொண்ட ஒவ்வோர் உயிரினையும் வழிபடுங்கள். பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி. பூமிதேவியைப் போன்று அனைத்தையும் பொறுப்பவராக இருக்க வேண்டும், நீங்கள் பொறுமையுடன் இருந்தால், உலகமே உங்கள் காலடியில் அமரும். எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும். அன்பு ஒரு முதலீடு. உலகில் எவ்வளவு போட்டாலும் மீண்டும் திரும்பப் பெறலாம். வாழ்வில் ஒருவன் விருப்பங்களுக்கும் கோபத்திற்கும் அடிமையாய் இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை அவனால் உணர முடியாது. அடக்கப்படாத மனம் நம்மை கீழ் நோக்கியே இழுத்துச் செல்லும், அடக்கப்பட்ட மனமோ நமக்குப் பாதுகாப்பளிக்கும், விடுதலையைத் தரும். இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற்கையோடு தினமும் நடத்தும் போராட்டமே மனித முன்னேற்றத்தின் படிக்கற்களாகும். அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை இவையே நமக்குத் தேவையாகும்.