பதிவு செய்த நாள்
04
ஜூலை
2018
01:07
திருத்தணி: கங்கையம்மன் ஜாத்திரை விழாவில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், எல்லம்பள்ளி கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, அம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இரவு, 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்துடன், பூ கரகம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.