பதிவு செய்த நாள்
05
ஜூலை
2018
11:07
தலைவாசல்: ஆனி திருவிழாவை முன்னிட்டு, தலைவாசல், சிறுவாச்சூரிலுள்ள, செல்வ மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, உருளுதண்டம் போடுதல், அக்னி கரகம், அலகு குத்துதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், அலங்கரிக்கப்பட்ட தேரில், துர்க்கையம்மன், அய்யனார் சுவாமிகளை எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, தேரை வடம்பிடித்த திரளான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். பின், சிறப்பு பூஜை செய்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.