பதிவு செய்த நாள்
05
ஜூலை
2018
11:07
ஈரோடு: திருப்பதி ஏழுமலையான் கோவில், புரட்டாசி நவராத்திரி பிரமோற்சவ விழா, விமர்சையாக நடக்கும். இந்தாண்டு, அக்., 10ல் துவங்கி, 18 வரை நடக்கிறது. அக்., 14ல் கருடசேவை விழா நடக்கிறது. அக்., மாதத்துக்கான, 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் விடுதி வசதி முன்பதிவு, வரும், 10 முதல் துவங்குகிறது. முன்பதிவு செய்ய விரும்புவோர், ஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள, ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என, டிரஸ்ட் நிர்வாகி உமாபதி தெரிவித்துள்ளார்.