பதிவு செய்த நாள்
06
ஜூலை
2018
12:07
பெத்தநாயக்கன்பாளையம்: கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, புத்திரகவுண்டன்பாளையத்தில், கூத்தாண்டவர் மற்றும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று நடந்தது. அதில், ஊர் முக்கிய பிரமுகர்கள், வடம் பிடித்து தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள், தேரை இழுத்து, ஏத்தாப்பூர் சாலை, ஆத்தூர் சாலை வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தனர். இதையொட்டி, மாரியம்மன், கூத்தாண்டவர், மூலவர் உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், குறவன், குறத்தி, நையாண்டி மேளம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளால், பார்வையாளர்களை அசத்தினர்.