பதிவு செய்த நாள்
13
ஜூலை
2018
12:07
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17 முதல் ஆக.,9 வரை நடக்கிறது.
ஆடி மாதபிறப்பு அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து,லட்சார்ச்சனை நடக்கிறது. ஆக.,9ல் லட்சார்ச்சனை பூர்த்தி விழாவும், ஆக.,10ல் லட்சார்ச்சனை யாக பூஜையும் நடக்கிறது. ஆடி வெள்ளி தோறும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மாலையில் முத்தங்கி, சந்தன காப்பு, மீனாட்சி அலங்காரங்கள் செய்கின்றனர். ஆடி கடைசி வெள்ளி ஆக.,10ல் பெரியநாயகியம் மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அன்று இரவு அம்மன் வெள்ளித் தேரில் ரதவீதிகளில் உலா வருதல் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.