பதிவு செய்த நாள்
13
ஜூலை
2018
12:07
திருச்சி:சமயபுரம் கோவில் யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலதா, மசினி என்ற யானையை வழங்கினார். கடந்த மே மாதம், கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த அந்த யானை பாகனையே மிதித்துக் கொன்றது. யானையை அமைதிப்படுத்த வந்த கால்நடை மருத்துவர்கள், யானையின் காலில் புண் இருப்பதை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்துவிட்டுச் சென்றனர்.
மீண்டும் புண்ணால் ஏற்பட்ட வலியால், கோவில் யானை மசினி அவதிப்பட்டது. இது பற்றி கோவில் நிர்வாகம் கொடுத்த தகவல்படி, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் இருந்து வந்த கால்நடை மருத்துக் குழுவினர், யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.