வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2018 11:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தெற்குத்தெரு காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. முதல் நாள் கோயில் காப்புக்கட்டு வைபவத்துடன் துவங்கியது. இரவில் பக்தர்கள் வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக ஊரணிக்கரைக்கு சென்று கரகம் எடுத்து வந்தனர்.
பெண்கள் பாதபூஜை செய்து அம்மனை வரவேற்றனர். கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு 2 ம் நாள் காலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நண்பகல் பூஜைகள் முடிந்து பக்தர்களின் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.அதை தொடர்ந்து பக்தர்களின் முளை ப்பாரி ஊர்வலம் துவங்கியது. பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்தும், முளைப்பாரியை சுமந்தும் ஊர்வலம் சென்றனர்.
இரவில் அம்மனை ஊர்வலமாக குளத்திற்கு கொண்டு சென்று நீரில் கரைத்து, அம்மனுக்கு பக்தர்கள் பிரியாவிடை கொடுத்தனர். நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள், நிர்வாகிகள் செய்தனர்.