காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2018 12:07
காரமடை: பெள்ளாதி அருகே உள்ள அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.பெள்ளாதி ஊராட்சி, சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூன்றாம் ஆண்டு திருக்கல்யாண விழா, 8ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 9ம் தேதி கொடியேற்றம், 10ம் தேதி தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம், 11ம் தேதி காலை கோமாதா பூஜைகள் நடந்தன.
நேற்று (ஜூலை 12)ல் காலை திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. சின்னத்தொட்டி பாளையம், சேரன் நகர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் சீர்வரிசை தட்டுகளை கோவிலுக்கு எடுத்து வந்தனர். காலை, 9:30ல் இருந்து மதியம், 12:30 மணி வரை அமிர்தவர் ஷினிக்கும்,நஞ்சுண்டேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கும்பகோணம் ராஜவிநாயகர் கோவில் அர்ச்சகர் பாபுசிவம், பெரியநாயகி அம்பிக சமேத கைலாசநாதர் கோவில் அர்ச்சகர் ஹரிஸ்சிவம் ஆகிய குருக்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.