பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
02:07
மாமல்லபுரம் : விட்டிலாபுரம் தாமரை குளத்தில், பழங்கால முருகர் கற்சிலை கண்டெடுக்கப் பட்டது.
கல்பாக்கம் அடுத்த, விட்டிலாபுரத்தில் உள்ள தாமரைக்குளம், அண்மையில் தூர்வாரப்பட்டது. இப்பணி முடிந்த நிலையில், குளத்தின் ஒரு பகுதி மண்மேடு, சமீபத்திய மழையில் கரைந்தபோது, அங்கு புதைந்திருந்த கற்சிலை வெளிப்பட்டு உள்ளது.பல நாட்களாக கிடந்த நிலையில், இப்பகுதியை நேற்று (ஜூலை 13)ல் கடந்தவர்கள் கண்டு, இது குறித்து, வருவாய்த் துறையினரிடம் தெரிவித்தனர்.
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர், வரதராஜன், நெரும்பூர் வருவாய் ஆய்வாளர், சுமதி ஆகியோர், சிலையை பார்வையிட்டபோது, பீடம் தவிர்த்து, 3 அடி உயரத்தில், வேல், மயிலுடன் முருகர் கற்சிலை, சேத நிலையில் இருந்தது. இங்கு, பழங்கால கோவில் இருந்ததன் அடை யாளமாக, பண்டைய செங்கல் கற்கள் கிடந்தன. அவர்கள், சிலையை மீட்டு, வட்டாட் சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.