பதிவு செய்த நாள்
25
ஜன
2012
12:01
திருநெல்வேலி:மேலப்பாளையம் பாரதியார்புரம் காளியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேக விழா (29ம் தேதி) நடக்கிறது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 27ம் தேதி காலையில் மங்கள இசை, தேவாரம், அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. மாலையில் மகா கணபதி கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவருதல், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை புறப்பாடு, முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. திரவ்யாகுதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.28ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு யந்திரஸ்தாபனம், ரத்னஞ்யாசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம் நடக்கிறது.கும்பாபிஷேக விழாவான 29ம் தேதி காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், ஸ்பர்சாகுதி, திரவ்யாருதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கன்னி விநாயகர், விமானம் மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 11 மணிக்கு மேல் மகாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை வெங்கடாச்சலம் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர். சுவாமி சங்கரானந்தா முன்னிலை வகிக்கிறார்.ஏற்பாடுகளை பத்ரகாளி அம்மன் கோயில் திருப்பணிக்குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞரணி, மகளிரணியினர் செய்துள்ளனர்.