Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோயில்களில் மானாமதுரை கஞ்சி ... மானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்ஸவ விழா துவக்கம் மானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2018
10:07

மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது.


Default Image
Next News


உலக உயிர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்கு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1980ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று (ஜூலை 20ல்) நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும் சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும், பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar