புதுச்சேரி: பிருந்தாவனம் கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு சுவாதி திருமஞ்சனம் நாளை நடக்கிறது. புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள சதானந்த விநாயகர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சமீபத்தில், கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில், லட்சுமி நரசிம்மர் உற்சவர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. சுவாதிநட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மருக்கு, நாளை (௨௧ம் தேதி) காலை 7.30 மணி முதல் 9.30 மணிவரை சுவாதி திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6.30 மணி முதல், 7.30 மணி வரை, சோடச கணபதி என்று அழைக்கப்படும், 16 கணபதிகள் குறித்து ஹர்ஷ வித்யா பவன் தத்வ போதானந்த சுவாமிகள் சொற்பொழிவாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை, பிருந்தானம் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.