முதுகுளத்துார்:முதுகுளத்துார் செல்வி அம்மன் கோவில் ஆடி பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜூலை 25 மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வருதலும், ஜூலை 26 ல் காலை 6:00 மணிக்கு சுப்பிரமணிய கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பால் அபிேஷகம் நடைபெறும்.மாலை 5:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல்,ஜூலை 27 காலை 6:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து பூக்குழி பிரவேசம் நடக்கிறது.