பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
12:07
மதுரை: ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பகுதி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பெண்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம், அம்மனுக்கு மிக உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதத்தில், பெரும்பாலான அம்மன் கோவில்களில் குண்டம், தேர்த்திருவிழா, சாட்டு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில், கோவில்களில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருப்பூர் நெசவாளர் காலனி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருல்பாலித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெரிய முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. கோவை பெரிய கடைவீதி மாகாளியம்மன் கோவிலில் உப்பு மிளகு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் மீனாட்சி அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.