பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
கோபி: பச்சமலை முருகன் கோவிலில், இன்னும் சில நாட்களில், தீ எச்சரிக்கை கருவி பொருத்தப்படவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நடந்த தீ விபத்துக்கு பின், தமிழகம் முழுவதும், கோவிலில் தீபமேற்றி வழிபடும் முறையில், பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க, இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் துவக்கமாக, பிரபல கோவில்களில், அணையா விளக்கு வைக்கப்பட்டு வருகிறது. அசாதாரண சூழலில் ஏற்படும், தீ விபத்துகளை உடனே உஷார்படுத்த வசதியாக, தீ எச்சரிக்கை கருவி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, பிரசித்தி பெற்ற, கோபி, பச்சமலை முருகன் கோவிலில், தீ எச்சரிக்கை கருவி பொருத்தப்படவுள்ளது. இதனுடன் ஸ்மோக் டிடெக்டர் கருவியும் பொருத்தப்படுகிறது. இது. கோவிலில் அதிகளவில் புகை ஏற்படும் சமயத்தில், தானாக சைரன் ஒலிக்கும். இரண்டு கருவிகளும், தலா ஐந்து இடங்களில், விரைவில் அமைக்கப்படவுள்ளது. கருவிகள் வந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் பொருத்தப்படும், என அதிகாரிகள் கூறினர்.