Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் ... விருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் பரவசம் விருதுநகர் கோயில்களில் ஆடி வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 199வது உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 199வது உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2018
04:07

சென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள  கோவில்களில் 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய  பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், சுவாமியின் வாகனங்கள், வஸ்திரங்கள் சுத்தம் செய்தல், பூஜை பொருள்கள் துலக்குதல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதுவரை 198 கோவில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது.

இந்த உழவாரப்பணியில்  400க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம். 22.7.2018 ஞாயிறன்று சென்னை திருவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் எழுந்தருளியுள்ள அஷ்டலிங்க திருக்கோயில்கள் அதன் திருக்குளங்களில் 199வது  உழவாரப்பணி நடைபெற இருக்கிறது.  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி.


அத்துடன் திருக்கோயில் சுற்றியுள்ள மக்களிடையே திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, அடியார்கள் புடைசூழ திருக்கோயில்களின் துõய்மை-நலன்-பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவீதிவுலா நடைபெறும். மதியம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல். தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு. அதன்பின் அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்படுவார்கள்.

தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar