தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடைபெற்றது. மூலவர்களுக்கு 18 வகையான அபிேஷக ஆராதனை செய்யப்பட்டது. கோயில் முன்புறம் உள்ள வளாகத்தில் 1008 பெண்கள் பங்கேற்ற மாங்கல்ய பூஜை , சக்தி ஸ்தோத்திரம், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. ஏற்பாடுகளை அழகன்குளம் அழகிய நாயகி அம்மன் மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரமோ ரெத்தினம் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிேஷக ஆராதனையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.