சிவகாசி: சிவகாசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன் சிவன் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா கடந்த 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு நாளும் ரிஷப வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் வீதி உலா வந்தார். 9ம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.