முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆறாம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலை வெங்கடேசன் பூஜாரி சக்தி கரகம் துாக்கி முக்கிய வீதிகளில் சென்றனர்.இன்னிசை மழலையர் பட்டிமன்றம் நடைபெற்றது.